விஜயகாந்தை கவனிக்க எனக்கு தெரியும்: பிரேமலதா பதிலடி: இயக்குனர் பாண்டிராஜ் மீது கடுப்பான  பிரேமலதா

0
181

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த விஜயகாந்தை அவரது உதவியாளர்கள் வீல் சேரில் அழைத்து வந்தனர். அப்போது அவரது ரசிகர்களும், தொண்டர்களும் அவர் நிலையை பார்த்து கண்ணீர் சிந்தினர்.

Oruvan

இது குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் தனது எக்ஸ் தளத்தில், “கேப்டன் விஜயகாந்திற்கு இப்போது சரியான ஓய்வு தேவை.

அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள். ப்ளீஸ். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை’ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா, மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஏதோ ஒன்று பதிவிட வேண்டும் என்று பதிவிடாதீர்கள்.இது ஒன்றும் சினிமா அல்ல, கட்சி. அவரை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். உங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Oruvan