மன்னர் ஆட்சிக்கு எதிராக விமர்சனம்: பாராளுமன்ற உறுப்பினருக்கு 6 வருட சிறைத்தண்டனை

0
220

தாய்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னருக்கு சொந்தமான நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை விமரிசித்து 2020 ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த பின்னணியிலே மன்னராட்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டில் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தாய்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் Rukchanok Srinork என்பவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரச சட்டத்தின் படி மூன்று வருட சிறைத்தண்டனையும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் மேலும் மூன்று வருடங்களும் என ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட Rukchanok Srinork தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.