ஆலன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி: இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

0
264

ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமானதாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் எட்டுத்தோட்டாக்கள் நாயகன் வெற்றி நாயகனாகவும் ஜேர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா நாயகியாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், ராமேஸ்வரம் முதலாலன பல இடங்களிலும், காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் ட்ரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேலும் தற்போது வெளியாகியுள்ள வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.