கடவுளின் கோபத்தில் இருந்து இஸ்ரேலால் தப்ப முடியாது: நாடாளுமன்றத்தில் பேசிவிட்டு மயங்கி விழுந்த எம்.பி

0
178

துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பி ஹசன் பித்மெஜ் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் துருக்கி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தபடி நேற்று பேசி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவர் அவையில் மயக்கம் போட்டு சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.

துருக்கியை விமர்சிக்கும் வகையில் அவையில் பேசிய அவர்,

வரலாறு தொடர்ந்து அமைதியாக இருந்தாலும் கூட உண்மை தொடர்ந்து அமைதியாக இருக்காது என்று காட்டத்துடன் கூறினார்.

எங்களை நீக்கி விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும் எங்களை விலக்கி விட்டாலும் நீங்கள் செய்த தவறுக்கான துன்பத்தில் இருந்து விலகி விட முடியாது. வரலாற்றின் துன்பத்தில் இருந்து நீங்கள் தப்பி விட்டாலும் கடவுளின் கோபத்தில் இருந்து நீங்கள் தப்ப முடியாது என்று பேசினார்.

துருக்கி சுகாதார மந்திரி பரெத்தீன் கோகா சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்,

தனது பேச்சின்போது பித்மெஜ் மிகுந்த குழப்பத்தில் காணப்பட்டார். அவரை மருத்துவ பணியாளர்கள் தீவிர கண்காணிப்புடன் கவனித்து வருகின்றனர் என உறுதி கூறியுள்ளார். இது தொடர்பில் காணொளி ஒன்றும் சமூக ஊடகத்தில் வெளிவந்துள்ளது.