க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் மாகாவித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் 9ஏ சித்தி பெற்று மாணவி மேரி டுலுக்சிக்கா ரொசேரோ அந்த கிராமத்திற்கு பெருமையை தேடிதந்துள்ளார்.
குறித்த மாணவியை கெளரவிக்கும் நிகழ்வு கவடாப்பிட்டி கிராமத்தில் அண்மையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது லக்சுமி கரங்கள் அமைப்பினால் இடம்பெற்றது. இதன்போது நப்சோ நிறுவனத்தின் பிரதானி கோகுலன், மற்றும் பாடசாலை, கிராம நிரவாகிகளும் கலந்து கொண்டனர்.
