யாழில் இரண்டு கோவில்களில் கைவரிசை காட்டிய பூசாரி!

0
215

தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பற்றை பூசகர் திருடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இரு ஆலயங்களில் கைவரிசையை காட்டிய பூசகருக்கு நேர்ந்த கதி! | Priest Stole Jewels From Two Temples In Jaffna

இச்சம்பவத்தில் கொக்குவிலைச் சேர்ந்த 27 வயதுடைய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பூசகர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தக் கைது நடவடிக்கையை பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவே மேற்கொண்டுள்ளனர்.