அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு ஐ.நா சபைக்கு முன் ஆர்ப்பாட்டம்

0
264

இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பினால் இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு, புதிய ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிர்ப்பு, இனவாதத்தை ஒழித்தல், பலஸ்தீனத்தை விடுவித்தல் ஆகிய விடயங்களை முன்னிறுத்தி எமது எதிர்கால இளைஞர்களுக்காக என்ற தலைப்பில் இடம்பெற்றது.

மேலும் தமது உரிமைகளை வென்றெடுக்க வீதியில் இறங்கி சுதந்திரமான எதிர்காலத்திற்காக வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Protest in Colombo