இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் இஸ்ரேல் வழிப்பாட்டு தலங்களை அழித்து வருவதாகவும் காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களையும் பாதுகாக்குமாறும் ஹமாஸ் யுனேஸ்கோ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
காஸா நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களை இஸ்ரேல் சிதைத்து வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. காஸாவின் மிகப்பெரிய ஓமரி மசூதி சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. ஐந்தாம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புனித தலத்தை இஸ்ரேல் இராணுவம் அழித்துள்ளது.
போர் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 104 பள்ளிவாசல்களும் மூன்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களும் இஸ்ரேல் தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் நிலை நிறுத்தும் பழமை வாய்ந்த கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும் என பாலஸ்தீன தொல்பொருள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஸாவின் கட்டிடக்கலை பாரம்பரியம் இந்த போரில் அழிக்கப்படக் கூடாது எனவும் கோரியுள்ளது. மருத்துவமனைகள், மசூதிகள், பாடசாலைகள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் கூட தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் இஸ்ரேல் அந்த இடங்களில் ஹமாஸ் படையினர் மறைந்திருப்பதாக காரணம் கூறி வருகிறது.