இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடன்

0
179

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் நீதித்துறையை ஸ்திரப்படுத்த உதவும் வகையில் குறித்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமது வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தியது. இந்த நிலையிலே இலங்கை கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கடன் திட்டமானது நிதித்துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டம் தலா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட இரண்டு துணை நிரல்களைக் கொண்டுள்ளது.

இதனிடையே இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதுடன் முழுமையான பொருளாதார மீட்சி உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.