மதுபானசாலைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்

0
226

மதுபானசாலைகளை நாளை முதல் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி சாதாரண தர மதுபானசாலைகளே இவ்வாறு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத்துறை அனுமதி பெறாத மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அனுமதி பெற்ற மதுபானசாலைகள் முற்பகல் 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.