ரஷ்யாவில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள விளாடிமிர் புடின்!

0
184

ரஷ்யாவில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் (2024) மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதி என்று விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. பல சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையிலேயே ரஷ்யாவில் அடுத்த ஆண்டு தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டியிடவுள்ள விளாடிமிர் புடின்! | Putin Will Compete Next Presidential Election

இதில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் கூலிப்படைத் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஒரு குறுகிய கிளர்ச்சியின் போது, புடின் தனது பிடியை இழக்கக்கூடும் என்ற பரவலான ஊகங்கள் எழுந்தன.

இருப்பினும் அந்த சம்பவம் நடந்து இரு மாதங்களில் மர்மமான விமான விபத்தில் பிரிகோஜின் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து விளாடிமிர் புடினின் செல்வாக்கு மேலும் வலுபெற்றது.

ரஷ்யாவில் அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டியிடவுள்ள விளாடிமிர் புடின்! | Putin Will Compete Next Presidential Election

இந்நிலையில் Tass மற்றும் RIA Novosti மாநில செய்தி நிறுவனங்களின்படி மார்ச் 17 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை புடின் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

லெவாடா நிலையத்தின் சுயாதீன கருத்துக் கணிப்பீட்டின்படி, சுமார் 80 வீத மக்கள் புடினின் செயல்திறனை அங்கீகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆதரவு இதயத்திலிருந்து வரலாம் அல்லது ஆபத்தானதாக மாற்றிய ஒரு தலைவருக்கு அடிபணிவதைப் பிரதிபலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.