யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அவதானம்!

0
186
Pickpocket thief is stealing smartphone from orange handbag. selective focus

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாகதொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடியவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட பெறுமதியான தொலைபேசிகள்

குறித்த தொலைபேசி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் திருட்டு தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறைபகுதியைச் சேர்ந்த ஒருவரையும் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளார்கள்.

வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களுக்குள் திருடப்பட்ட பெறுமதியான தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொலைபேசிகளை யாராவது தொலைத்திருந்தால் அவர்களை நேரடியாக வந்து உரிய ஆவணங்களை ஆதாரங்களை காட்டிதிருடப்பட்ட தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என குற்றத்தடுப்பு பிரிவினர் அறிவித்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.