எயிட்ஸ் பரவுவதைத் தடுக்க தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் ‘ஆணுறை விற்பனை இயந்திரம்’ (Condom Vending Machine) நிறுவலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் வழியில் ஆணுறைகளைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த வாரம் 20 இலட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும் வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களுக்கு இந்த ஆணுறைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.