நயன்தாரா பிறந்தநாளில் விலை உயர்ந்த காரை பரிசளித்த விக்கி! இத்தனை கோடியா?

0
174

நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் நவம்பர் 18ம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில் கணவர் விக்னேஷ் சிவன் தனக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்ததாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். மெர்சிடிஸ் மேபேக் நிறுவனத்தின் இந்த கார் சுமார் 2.69 கோடி முதல் 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் ஜோடி கடந்தாண்டு ஜூன் மாதம் இருவீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் நயன்தாரா பெற்றெடுத்தார். தற்போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது பிறந்தநாள் பரிசு குறித்து அவர் வெளியிட்ட தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.