தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமி..!

0
271

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமி ஒருவரை பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்   ஊடக அறிக்கை

பொலிஸ் பிரிவு அதிகாரிகளான சப்-இன்ஸ்பெக்டர் நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தசுன் ஆகியோர் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் அலுவலக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமியால் அதிர்ச்சி | Shocked By A Teenage Girl Tried To Commit Suicide

சம்பவத்தில் கொஸ்பலான, பொல்பிதிமுகலான பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியே இவ்வாறு கடலில் அடித்து செல்லப்பட்டார்.

உயிரைக் காப்பாற்றிய சிறுமியை தாயிடம் ஒப்படைத்ததில், சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கடலில் குதித்திருப்பது தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.