பாலியல் குற்றசாட்டில் கைதானவர் தற்கொலை..

0
159

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தையில் வசிக்கும் 54 வயதுடையவர் என அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயதுடைய யுவதி முறைப்பாடு 

ஹோமாகம, பனாகொட மாதெனியவத்த பிரதேசத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் அத்துருகிரிய பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

பாலியல் குற்றசாட்டில் கைதானவர் பொலிஸ் தடுப்புக் காவலில் தற்கொலை | Man Arrested On Sex Charges Commits Suicide

கைதானவர் பொலிஸ் தடுப்புக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.