ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறும் ரணில்.. விமல் வீரவன்ச உறுதி

0
171

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் பின்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“பல்லி சொல்வதை போன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வரமாட்டார் என நானும் கூறுவேன்.

யாராவது அவர் வருவார் என்று நினைத்தால் பாவம் என்றே கூற வேண்டும். அவர் வேறு ஏதேனும் சர்வதேச அமைப்பில் பதவி பெற்று தனது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழிப்பார்” என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் வீழ்ச்சி

இதேவேளை, தாம் மற்றும் உதய கம்மன்பிலவத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமானது.

ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறும் ரணில் | Sri Lanka Presidential Election 2024 Candidates

சமகால அரசாங்கத்தின் வீழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நேற்று முன்தினம் நீக்கியுள்ளார்.

அது இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியை ஆரம்பிக்கும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.