வங்காள விரிகுடாவில் தாழ் அமுக்கம்.. பலத்த காற்று மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம்

0
205

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வங்காள விரிகுடாவில் உருவான தாழ் அமுக்கம்; பலத்த காற்று மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம் | A Depression Formed In The Bay Of Bengal

தென்அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது.

இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் நாளையளவில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல்பிராந்தியத்திற்கு மேலாக காணப்படும். ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வு கூறல்களை கவனித்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வங்காள விரிகுடாவில் உருவான தாழ் அமுக்கம்; பலத்த காற்று மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம் | A Depression Formed In The Bay Of Bengal

திருகோணமலை தொடக்கம் பொத்துவில், ஹம்பாந்தோட்டை, காலி ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில்  காற்று வீசும்

சிலாபம் தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

வங்காள விரிகுடாவில் உருவான தாழ் அமுக்கம்; பலத்த காற்று மின்னல் தாக்கங்கள் ஏற்படலாம் | A Depression Formed In The Bay Of Bengal

மேலும் நாட்டை சூழ உள்ள ஏனைய பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும்  சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.