எனக்குள் கலை இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்; பார்த்திபன் பதிவு

0
255

இயக்குநர் பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இந்த படம் குறித்த புதிய அறிவிப்பை இயக்குநர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் “க(ம)லை …. மிகவும் நேசிப்பதற்கான காரணம் கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் அவரும் ஒருவர்! (அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது.)

ஸ்ருதிஹாசன் அவர்களை வைத்து ஒரு பாடலை என் புதிய படத்திற்காக படமாக்கிய போது அவரது அலாதி திறமைகள் (பாட்டும் நடனமும்) என்னை ஆச்சர்யப்படுத்திய வேளையில் இன்னாரின் மகள் என்ற ஞாபகம் வந்ததால் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்பதுணர்ந்தேன்.