கண்ணீர் காடாக மாறிய கிளிநொச்சி; உணர்வுப் பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

0
156

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றைய தினம் மாவீரர் நினைவு நாள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தாய் மண் விடுதலைக்காக தன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது மாவீரர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தி கதறியழுத காட்சிகள் அங்கிருந்த பலரின் மனதை நெகிழவைத்திருந்தது.

வரலாறு காணாத வகையில் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வில் மக்கள் திரண்டமையால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.

Maaveerar Naal 2023 - Kilinochchi

Maaveerar Naal 2023 – Kilinochchi

Maaveerar Naal 2023 - Kilinochchi

Maaveerar Naal 2023 – Kilinochchi

Maaveerar Naal 2023 - Kilinochchi

Maaveerar Naal 2023 – Kilinochchi

Maaveerar Naal 2023 - Kilinochchi

Maaveerar Naal 2023 – Kilinochchi

Maaveerar Naal 2023 - Kilinochchi

Maaveerar Naal 2023 – Kilinochchi

Maaveerar Naal 2023 - Kilinochchi

Maaveerar Naal 2023 – Kilinochchi

Maaveerar Naal 2023 - Kilinochchi

Maaveerar Naal 2023 – Kilinochchi