திருமணத்திற்கு சென்ற இடத்தில் சோகம்; நாளை பிறந்த நாள், இன்று மரணம்!

0
246

கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி  உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எச்.லோச்சனா கவ்யாஞ்சலி என்ற பெயருடைய 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

திருமணத்திற்கு சென்ற இடத்தில் சோகம்

இவர் சிறிபுர பிரதேசத்திலிருந்து குருநாகல் பிரதேசத்திற்கு திருமண வீடொன்றிற்கு குடும்பத்துடன் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றொரு யுவதியும் அவரது பெற்றோரும் படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.