திருமணத்தின் போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரூ.500 நோட்டுகளை மாலையாக அணிந்த மணமகன்!

0
187

இந்திய மாநிலம் ஹரியானாவில் திருமணத்திற்காக மணமகன் ஒருவர் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரூ.500 மாலையை அணிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே திருமணம் என்றாலே பலரும் ஆடம்பரமாக செலவு செய்து வருகின்றனர். திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதற்காக வித்தியாசமான விடயங்களை செய்து வருகிறார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் ஹரியானா மாநிலத்தில் உள்ள குரேஷிபூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள மணமகன் ஒருவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மணமகன் அணிவதற்காக ரூ.20 மதிப்புள்ள பண மாலையை ரூ.500 நோட்டு கொண்டு தயார் செய்திருந்தனர். இந்த மிகப்பெரிய நீளம் கொண்ட மாலையை மணமகன் அணிந்திருந்தார்.

வைரலாகும் வீடியோ

தற்போது மணமகன் அணிந்துள்ள பிரம்மாண்டமான பண மாலை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது, 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3.19 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. மேலும், பயனர் ஒருவர் இது குறித்து வருமானவரித்துறைக்கு தெரிவிப்போம் என பதிவிட்டுள்ளார்.