மனித புதைகுழி ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை..

0
243

முல்லைத்தீவு –  கொக்குதொடுவாய் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும்  (24.11.2023)  ஆம் திகதி விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிடப்படவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது 2வது நாளாக நேற்றையதினம்  (21.11)  இடம்பெற்றதுடன் அகழ்வு பணி  பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணியின்போது  இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதணை | Kokkuthuduwai Test With Special Scanning Machine

மனித எலும்புக்கூட்டு தொகுதிகள்

அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதணை | Kokkuthuduwai Test With Special Scanning Machine

இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும்.தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும். 

எதிர்வரும் (24.11.2023) ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதணை | Kokkuthuduwai Test With Special Scanning Machine

எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.