யாழ். வட்டுக்கோட்டை இந்து கல்லூரி தேசிய மட்ட நடனப் போட்டியில் முதலிடம்

0
163

தேசிய மட்ட நடனப் போட்டியில் யாழ். வட்டுக்கோட்டை இந்து கல்லூரி முதலிடம் இடத்தைப் பெற்றுள்ளது.

சிரேஷ்ட பிரிவில் குழு ஒன்று பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

பரத நாட்டியப் போட்டி

குறித்த போட்டியில் 1001 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பரத நாட்டியப் போட்டியிலேயே வட்டுக்கோட்டை இந்து கல்லூரி இச் சாதனை படைத்துள்ளது.

தேசிய மட்ட நடனப் போட்டியில் யாழ். வட்டுக்கோட்டை இந்து கல்லூரி முதலிடம் (Photos) | Vattukkottai Hindu College Won First In National

இந்நிலையில் அந்த மாணவர்கள், அம்மாணவர்களை வழிப்படுத்தி பல வகையிலும் ஊக்கமளித்து துணை புரிந்த ஆசிரியர்கள், பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலைச் சமுகத்தினர் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்ட நடனப் போட்டியில் யாழ். வட்டுக்கோட்டை இந்து கல்லூரி முதலிடம் (Photos) | Vattukkottai Hindu College Won First In National