வவுனியாவில் வான்பாயும் 93 குளங்கள்; மக்கள் குதூகலம்

0
251

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன் 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன.

வவுனியாவில் வான்பாயும் 93 குளங்கள்; மக்கள் குதூகலம் | 93 Air Flow Ponds In Vavuniya People Rejoice

மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன. அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில் அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குளங்கள் வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றனர்.    

வவுனியாவில் வான்பாயும் 93 குளங்கள்; மக்கள் குதூகலம் | 93 Air Flow Ponds In Vavuniya People Rejoice