பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென சில போட்டியாளர்களால் தெரிவித்ததையடுத்து ரெட் காரட் கொடுத்து அவரை கமல்ஹாசன் வெளியேற்றியுள்ளார்.
இந்த முடிவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
இது தொடர்பில் பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
“நீங்கள் எனக்கு நல்ல விளையாட்டைக் கொடுத்தால் நான் உங்களுக்கு சிறந்த நிகழ்ச்சியை வழங்குவேன். முறையாக நடந்து கொள்வேன் என நான் சத்தியம் செய்கிறேன்.
ஒரு இடைவெளி முடிச்சிட்டு வர்ற படத்தோட இரண்டாவது பாதி போல பழிவாங்கி ஆடுறேன்” எனக் குறிப்பிட்டு விஜய் டிவி, கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை பதிவில் டேக் செய்துள்ளார்.
இரண்டாவது பதிவில், ”ரொம்ப ஷார்ப்-ஆன புள்ளிங்களால தான் அது முடியும். (தயாரிப்பு நிறுவனத்தைக் குறிப்பிட்டு) என்னை மீண்டும் உள்ளே அனுப்புவது குறித்து யோசித்தால், எனக்கு இரண்டு போட்டியாளர்களை வெளியே அனுப்புவதற்கான இரண்டு ரெட் கார்ட்டுகள் வேண்டுமெனவும், பிக் பாஸ் போட்டியில் நான் கேப்டனாக வேண்டும்” என நிபந்தனைகள் விதித்துள்ளார்.