காஸா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்

0
290

காஸாவின் மிகப்பெரிய வைத்தியசாலையான அல்-ஷிபா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் காஸா அமைச்சு கூறியுள்ளது.

குறித்த வைத்தியசாலையை ஹமாஸ் படையினர் புகலிடமாகப் பயன்படுத்துவதாகவும் இங்கிருந்து அவர்கள் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு மருத்துவமனை தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், தங்களது பாதுகாப்பிற்கு உறுதியில்லை என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த வார இறுதியில் குறித்த வைத்தியசாலை அருகில் அம்பியுலன்ஸ் மீது இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.