உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைப்பதில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என குறித்த குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த இதயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாணசபைகளை தொடர்ந்து நடத்துவது நாட்டின் ஜனநாயத்திற்கு மரண அடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பிற்போட முடியாது எனவும் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்த வேண்டுமெனவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.