பிக்பாஸ் வீட்டில் ‘பெண்கள் பாதுகாப்பு’ குறித்து வனிதா கருத்து

0
254

பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக போய்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சீசன் 3யின் போட்டியாளரும் ஜோவிகாவின் தாயுமாகியா வனிதா, பிரதீப் போட்டியிலிருந்து வெளியேறிய விடயம் தொடர்பாக தனியார் யூட்யூப் சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் யதார்த்தமான சில விடயங்கள் தொடர்பில் மனம் திறந்துள்ளார். குறித்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதில் “கதவை திறந்து வைத்துக் கொண்டுதான் பாத்ரூம் போனேன் என்று பிரதீப்பே ஒத்துக் கொண்டார். அதற்கு பிறகுதான் அவர் வெளியேற்றப்பட்டார். அதேபோல் பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை நாங்கள் குறிப்பாக நான் பயன்படுத்தவே இல்லை என்பதையும் ஜோவிகா நேற்று விசித்திராவிடம் தெளிவுப்படுத்திவிட்டார்.

ஆனால் வெளியிலோ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜோவிகா, பூர்ணிமா, மாயா உள்ளிட்டோர் சொல்லி பிரதீப்புக்கு ஒரு முத்திரை குத்தி அனுப்பி விட்டார்கள் என்ற பிம்பம் இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு என்பதை அடிப்படையாக வைத்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு இந்த வார இறுதியில் கமல் ஹாசன் தெளிவுப்படுத்த வேண்டும். அவர் அப்படி செய்யாத பட்சத்தில் அது அவரது அரசியல் நிலைப்பாடுக்கே பின்னடைவாக இருக்கும்.

இவ்வளவு பெரிய சேனல், கம்பெனிக்கு ஒரு லீகல் டீம் இருக்கும் அல்லவா. அப்போதே அவர்களை அழைத்து இதற்காகத்தான் பிரதீப்பை வெளியேற்றுகிறோம் என்று தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்புக்காக பிரதீப்பை எதன் அடிப்படையில் வெளியேற்றினோம் என்று தெளிவுப்படுத்தவில்லை என்றால் நானோ அல்லது எனது மகளோ வழக்கு தொடுப்போம்.

ஏனெனில் பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை முதலில் ஜோவிகா பயன்படுத்தவே இல்லை. அப்படி இருக்கும்போது அவள் மீது அப்படி ஒரு பெயர் வந்திருக்கிறது. எனவேதான் சேனல் தரப்பு தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.