இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிக அரிதான கல்வெட்டு!

0
240

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை – திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் ஆய்வுக் குழு

தொல்பொருள் திணைக்களத்தின் தலைமையகத்தின் கல்வெட்டுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் இந்த அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை நகலெடுக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள மிக அரிதான கல்வெட்டு! | The Rarest Inscription Found In Sri Lanka

கல்வெட்டுப் பிரதி

தொல்பொருள் திணைக்களத்தின் உரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திம்புலாகலை மலைத்தொடரில் தங்கியிருந்து கடந்த (26.11.2023) ஆம் திகதி முதல் கல்வெட்டுப் பிரதி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கல்வெட்டு சுமார் 45 அடி நீளமும் 18 அடி உயரமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.