நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டார் நேற்று கொண்டாடியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சண்டைகளும் வாக்குவாதங்களை அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. பிரதீப்பின் வெளியேற்றத்தினால் வீட்டில் அதிகப்படியான மன சங்கடங்கள் ஏற்பட்டிருக்கிறது.
அதையே காரணமாக வைத்து இரண்டாக வீடு பிரிந்து மாறி மாறி சண்டை போட்டு வருகிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அவரின் கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் டாஸ்க் செய்தனர். பிறகு கமல்ஹாசனுக்காக கேக் வெட்டி வாழ்த்து கூறினார்கள்.
அது மட்டும் இல்லாமல் கமல்ஹாசனின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பிரியானி வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்டு மகிழ்ந்த போட்டியாளர்கள் உலகநாயகனுக்கு நேற்று நன்றி கூறினார்கள்.
தமிழ் சினிமா உலகில் பல்வேறு சிறந்த திரைப்படங்களை கொடுத்து பலருக்கு முன்மாதிரியாக உலக நாயகன் கமல்ஹாசன் திகழ்ந்து வருகிறார். அவரின் பிறந்தநாள் பரிசாக வெளியான ட்ரைலரும் பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


