காஸா பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பை இஸ்ரேல் ஏற்கும்; பெஞ்சமின் நெதன்யாகு

0
236

போருக்குப் பின்னர் காஸாவின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பை ஏற்க இஸ்ரேல் தயார் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இஸ்ரேல் காலவரையின்றி பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவ்வாறு பாதுகாப்புப் பொறுப்பை ஏற்காவிடில் என்ன நடக்கும் என்பது நம் எல்லோருக்கும் கண்கூடாகத் தெரிகிறது. பொதுவான ஒரு போர் நிறுத்தம் தமது நாட்டின் போருக்கு பங்கம் விளைவிக்கும்.

ஆனால், உத்தியோகபூர்வமான சிறிய அளவிலான போர் நிறுத்தம், இங்கொன்றும் அங்கொன்றுமாக சில மணிநேரங்கள் இதற்கு முன்னரும் நடப்பில் இருந்துள்ளன. நிலைமையைக் கருத்தில்கொண்டு உதவி, மனிதநேயப் பொருட்கள் வர அல்லது பிணைக்கைதிகள் வெளியேற அவை சாத்தியமே.

ஆனால் பொதுவான போர்நிறுத்தம் இருக்கப் போவதில்லை” என தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் ஆகிய இரண்டுமே காஸாவில் அனைத்துலக நெருக்குதலைப் பொருட்படுத்தாது பொதுவான போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.