சோமாலியாவில் கடும் வெள்ளம் – 40ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

0
222

சோமாலியாவில் மழைக்கால வெள்ளத்தால் சுமார் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக 113,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 700,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

சோமாலியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம், அவசர நிலை அமலில் உள்ளதாக கூறியது. நகரத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 384 இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக OCHA தெரிவித்துள்ளது. இதனையடுத்து வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.