சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் பட்டதாரி; வெளியானது பிரித்விராஜ் படத்தின் புதிய போஸ்டர்!

0
194

நடிகர் பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆடுகளுக்கு நடுவில் நீளமான முடி மற்றும் தாடியுடன் பிரித்விராஜ் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்ளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சவுதி அரோபியாவுக்கு வேலைக்காக சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். நாயகன் பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராகவும் இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.