அன்னபூரணியாக அவதாரம் எடுத்த நயன்தாரா; வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
248

அன்னப்பூரணி படம் டிசம்பர் முதலாம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அன்னப்பூரணி படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் சமையலறையில் கரண்டியை பிடித்தபடி நயன்தாரா காணப்படுகிறார். இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

படம் டிசம்பர் 1ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் விரைவில் இசை வெளியீடும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாயகியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.