சரிகமப பாடகர் ப்ரியனின் கல்விக்கு தேவையான செலவுகளை நடிகர் ராகவா லாரன்ஸ் பொறுப் பேற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் சென்னையை சேர்ந்த ஆட்டிசம் குறைபாடு உடைய 9 வயது சிறுவன் ப்ரியனும் இந்த நிகழ்ச்சியில் பாடி வருகிறார்.

ஆட்டிசம் குறைபாடு உடைய சிறுவனான ப்ரியனுக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம் என்பதால் நடுவர்கள் அவரை போட்டியில்லாத நபராக தேர்வு செய்துள்ளனர்.
வழமை போல ப்ரியன் பாடல் பாடி அரங்கினை நெகிழ வைத்திருந்தார். சரிகமப நிகழ்ச்சிக்கு இந்த வாரம் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
ப்ரியன் கடவுள் குழந்தை, இவருக்கு உதவி செய்ய கடவுள் என்னை அனுப்பியதாக நினைக்கிறேன் என்று கூறிய லாரன்ஸ், ப்ரியனின் அனைத்து கல்வி செலவுகளையும் பொறுப்பேற்று கொண்டதாக அறிவித்துள்ளார்.
மேலும், சரிகமப நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் ப்ரியனின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் ஏற்பட்டு வருவதாக அவரின் அம்மா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

