மரண தண்டனை கைதியின் மகளுக்கு கோலாகலமாக நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா

0
224

இலங்கையில் அதிவிசேட பிரமுகர் ஒருவரை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு பூஸ்ஸ சிறையில் அதிபாதுகாப்பு அறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் குழுவின் உறுப்பினர் என கூறப்படுகிறது.

இவரது மகளுக்கு கொழும்பில் உள்ள நட்சத்திர ​ஹோட்டலொன்றில் மிகவும் பிரமாண்டமான முறையில் பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கைதியின் மகளுக்கு கோலாகலமாக நடத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா | Ceremony For The Daughter Of A Death Row

பெருந்தொகை செலவழித்து பிரமாண்டமான முறையில் அந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தம் நிகழ்வும் விருந்துபசாரமும் கடந்த 23ஆம் திகதி இரவு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் விலையுயர்ந்த அழைப்பிதழ் அட்டை மிகவும் அழகாக அச்சிடப்பட்டுள்ளதோடு நிகழ்வுக்காக 150-200க்கும் உட்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.

நீராட்டு விழா  நிறைவடைந்தததும் கொழும்பு, கொம்பனி வீதியில் ஹோட்டலுடன் இருக்கும் முன்னணி வீட்டுத்தொகுதியின் அறையொன்றில் மற்றுமொரு பிரிவினருக்கு அன்றிரவு மீண்டும் விருந்து வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.