இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசர அமர்வின் போது காஸா பகுதியில் மோதல்கள் நிலவி வரும் நிலையில் சிவிலியன்களை பாதுகாப்பதற்கும் சட்ட மற்றும் மனிதாபிமானக் கடமைகளை நிலைநிறுத்துவதற்குமான தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது.
போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல்
22 நாளாக தொடரும் இஸ்ரேல் – பலஸ்தீன போரில் காஸாவில் மாத்திரம் சுமார் 20 இலட்சம் மக்கள் அவதிப்பட்டு வருவதோடு பலஸ்தீன தரப்பிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த தீர்மானத்தில் 193 உறுப்பினர்களை கொண்ட சபையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்தனர். 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 45 பேர் கலந்து கொள்ளவில்லை.
இதனையடுத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து இஸ்ரேல்- பலஸ்தீனத்திற்கான இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.