இந்திய மீனவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
293

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மூன்று படகையும் அதிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் ஒக்டோபர் 15ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணை இன்று நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது 12 மீனவர்களின் விளக்கமறியலையும் நவம்பர் 8ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.