போர் விதிகளுக்கு உட்பட்டு இஸ்ரேல் செயல்பட வேண்டும்..! நெதன்யாகுவுக்கு பாடம் எடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

0
190

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போர் விதிகளுக்கு உட்பட்டு இஸ்ரேல் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

போர் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்

ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் கட்டாயம் போர் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஜோ பைடன், இரண்டு நாடுகள் என்ற தீர்வு நோக்கி நகர வேண்டும் என்றார்.

போர் செய்யும் முறை... நெதன்யாகுவுக்கு பாடம் எடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் | Israel Must Joe Biden Amid Israel Hamas Conflict

இஸ்ரேலுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் இருப்பதாக குறிப்பிட்ட ஜோ பைடன், அதே சமயம், நிம்மதியாக மட்டுமே வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களின் மனித நேயத்தைப் புறக்கணிக்க முடியாது என்றார்.

இன்று மட்டுமல்ல எப்போதும் இஸ்ரேலுக்கு தமது மக்களை பாதுகாக்கும் உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ள அவர், அப்பாவி பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்காமல் போரை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

போர் செய்யும் முறை... நெதன்யாகுவுக்கு பாடம் எடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் | Israel Must Joe Biden Amid Israel Hamas Conflict

இந்த வேளையில் அப்பாவி பாலஸ்தீனியர்களையும் புறந்தள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், தமது முயற்சியால் காஸா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

போர் செய்யும் முறை... நெதன்யாகுவுக்கு பாடம் எடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் | Israel Must Joe Biden Amid Israel Hamas Conflict