காசாவுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா..

0
241

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு கடந்த (18.10.2023) அன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது டெல் அவிவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜோ பைடனும், பெஞ்சமின் நேதன்யாகுவுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஜோ பைடனின்  கருத்து 

குறித்த சந்திப்பின் போது ஜோ பைடன், ” காசாவில் உள்ள வைத்தியசாலையில் மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்து நான் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் அடைந்தேன். நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இத் தாக்குதல் மற்ற குழுவினரால் நடாத்தப்பட்டதாக தெரிகிறது, இத்தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல் அல்ல” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், “ஒரு சிறிய காரணத்திற்காக இங்கே இருக்கிறேன். அமெரிக்கா எங்கு நிற்கிறது என்பதை இஸ்ரேல் மக்களும் உலக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஹமாஸ் அமைப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். அளவுக்கதிகமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையானதை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார்.

காசாவுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா | Us Offered To Provide Financial Assistance To Gaza

மேலும் அவர் காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என அறிவித்தார். அதன் பின்னர், போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததற்கு ஜோ பைடனுக்க பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் காசா பகுதிக்கு குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்தை அனுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.