கால்பந்தில் அசத்தும் அஜித்தின் மகன்! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

0
262

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக், கால்பந்தாட்டம் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. சென்னையின் FC Grassroot அகாடமியில் ஆத்விக் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்விக்கிற்கு தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நடிகர் அஜித் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரியில் வெளியான துணிவு படம் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.