காஸாவில் இடம்பெறும் இன்னொரு முள்ளிவாய்க்கால்…!

0
231

தெற்கு காஸாவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்படியே ஒரு காலத்தில் நாங்கள் அனுபவித்ததை நினைவூட்டுவதாக பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் முகநூலில் கூறியிருப்பது,

காஸாவில் தற்போது அறியப்படும் கிபிர் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், பதுங்குகுழி, இடப்பெயர்வு, நிவாரணம், ஐசிஆர்சி, யுனிசெப், உலருணவுப் பொருட்கள் சுமந்த வாகனத் தொடரணி அகிய அனைத்து சொற்களும் எமது மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று.

காஸாவில் இடம்பெறும் இன்னொரு முள்ளிவாய்க்கால்.! | Another Mullivaikkal Taking Place In Gaza Israel

காஸா தொடர்பில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், காஸாவில் இன்னொரு முள்ளிவாய்க்கால் இடம்பெற்று வருவது என்பதுதான் உன்மைதான். எமது நாட்டில் 2009 இல் எமக்கு நடந்ததுதான் இப்போது 2023 இல் காஸா மக்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.