பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 32 வயதுடைய நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான ஈடன் ஹசார்ட் (Eden Hazard) சகல விதமான கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார்.
இவர் ப்ரிமியர் லீக் தொடரின் முன்னனி கழகமான செல்சி அணியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதன்முறையாக இணைந்து கொண்டார்.

ஈடன் ஹசார்ட் (Eden Hazard) செல்சி அணியில் இணைந்த பின்னர் நடைப்பெற்ற ப்ரிமியர் லீக் தெடர் மற்றும் FA கிண்ணத்தை செல்சி அணி கைப்பற்றியது. இந்த பருவ காலத்தில் செல்சி அணி சார்பில் அதிக கோல்களை பதிவு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.
ஈடன் ஹசார்ட்டனின் (Eden Hazard ) வருகைக்கு பின்னர் செல்சி அணி இரண்டு ப்ரிமியர் லீக் கிண்ணங்கள், இரண்டு யூரோ கிண்ணங்கள் மற்றும் ஒரு FA கிண்ணத்தை கைப்பற்றியது.

இறுதியாக 2018 – 2019ஆம் காலப்பகுதியில் ஈடன் ஹசார்ட்( Eden Hazard ) செல்சி அணி யூரோ கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
தொடர்ந்து ஈடன் ஹசார்ட்சை ( Eden Hazard ) 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி ஸ்பெயின் கழகமான ரியல் மெட்ரிட் 2024ஆம் ஆண்டு வரையான 100 மில்லியன் ரூபாய் பெருமதியில் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்ததின் மூலம் ஈடன் ஹசார்ட்சை ( Eden Hazard ) ரியல் மெட்ரிட் அணி சார்பில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இரண்டாவது வீரராவார்.
முதலாவதாக வெல்ஷ் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான கரேத் பேல்லை (Gareth Bale) 101 மில்லியன் ரூபாய் மதிப்பில் ரியல் மெட்ரிட் அணி வாங்கியது. செல்சி அணியில் பிரகாசித்தது போலவே ஸ்பெயினிலும் இவரது திறமையை வெளிப்படுத்தினார்.

போட்டிகளின் போது ஈடன் ஹசார்ட்டிற்கு ( Eden Hazard ) ஏற்பட்ட உபாதை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்.
மேலும், ரியல் மெட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்செலோட்டி (Carlo Ancelotti) உடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தொடர்ந்து ஈடன் ஹசார்ட்டினால் ( Eden Hazard ) போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

ரியல் மெட்ரிட் அணியில் இருந்த காலப்பகுதியில் ஈடன் ஹசார்ட் (Eden Hazard) அணிக்காக எட்டு முக்கிய கிண்ணங்களை கைப்பற்ற உதவினார்.
இவர் கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் கால்பந்தாட்ட உலகில் தலைசிறந்த வீரராக திகழ்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





