விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் சந்தேகநபரை விடுதலை செய்த நீதிபதி இளஞ்செழியன்

0
215

தமிழீழ விடுதலைப் புலி உளவு பிரிவை சேர்ந்ததாக கூறப்படும் சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொலை குற்றச்சாட்டு வழக்கில் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

2006ஆம் ஆண்டு ஆடி மாதம் செட்டிக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் எதிரியை கைது செய்ததாக அவரை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் சாட்சியம் அளித்திருந்தார்.

எனினும் கொலையுடன் நேரடியாக தொடர்புபடுத்தி எந்தவொரு சான்று பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் சாட்சியம் அளித்துள்ளார். 

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு சந்தேகநபரை விடுதலை செய்த நீதிபதி இளஞ்செழியன் | Judge Ilancheliyan Court Order

துப்பாக்கிப் பிரயோகத்தால் ஏற்படுத்தப்பட்ட மரணம்

இதேவேளை குறித்த உயிரிழப்பு துப்பாக்கிப் பிரயோத்தால் ஏற்படுத்தப்பட்ட மரணம் என வைத்திய கலாநிதி சாட்சியம் அளித்தார்.

என்ற போதும் தான் இக்கொலையை செய்யவில்லை என எதிரி, நீதிபதி முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் எதிரியை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.