சரிகமப நிகழ்ச்சியில் “ கல்யாண தேன் நிலா” பாடலை பாடி யாழ். குயில் கில்மிஷா அரங்கத்தினை இசை மழையில் மூழ்க வைத்திருந்தார்.
ஞாயிற்று கிழமை ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமியின் பாடலை கேட்டு நடுவர்களே உறைந்து விட்டனர். அவர் பாடிய முழு பாடலின் காணொளி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. மேலும், கில்மிசா வெற்றி பெற வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.