வவுனியாவில் விபத்து 2 பொலிஸார் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்

0
192

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிரடி படையினர் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர்  படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் வவுனியா வெளிக்குளம் பகுதியில் இன்று (09-10-2023) திங்கட்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மடுகந்தை பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த பொலிஸ் விசேட அதிரடி படையினரின் ஜீப் ரக வாகனம் வெளிக்குளம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழர் பகுதியில் இரவு பயங்கர விபத்து: 2 பொலிஸார் உயிரிழப்பு ! 6 பேர் படுகாயம் | Vavuniya Accident 2 Police Officers Died 6 Injured

குறித்த விபத்தில் வாகனத்தில் இருந்த இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.