க. பொ. த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு..

0
340

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.