நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு இன்று!

0
248

உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.

எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கான முன்னாயத்தங்கள் நடந்து வந்த நிலையில் குறித்த திகதியில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று (திங்கட்கிழமை) யாழ். தந்தை செல்வா அரங்கில் தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலில் பெரும்பாலும் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு இன்று! | Final Decision Regarding Judge Saravanaraja Today