கட்அவுட், சுவரொட்டிகளில் தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தல்

0
214

தனது புகைப்படத்தை இனிமேல் கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் கோஷம் அன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே இன்றைய தேவை. கட்அவுட் மற்றும் அரசியல் கோசங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோஷங்கள் மற்றும் கட்அவுட் அரசியலுக்கு தான் எப்போதும் எதிரானவர் என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, புதிய அரசியல் பயணத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் இன்று நேற்றும் கலந்துக் கொண்ட ஜனாதிபதி செங்கலடி மத்திய மகா வித்தியாலத்திற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தனது மிகப் பெரிய கட்அவுட்யை நேற்றிரவு அவதானித்ததுடன் அதனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி: